தூத்துக்குடி

314 மாணவர்களுக்கு மடிக்கணினி அளிப்பு

15th Jul 2019 07:01 AM

ADVERTISEMENT

வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 314 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.
இவ்விழாவுக்கு, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கடற்கரைவேல் தலைமை வகித்தார்.  தலைமையாசிரியர் கஜேந்திரபாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. சின்னப்பன், 314 மாணவர், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்கினார். இதில், அதிமுக ஒன்றியச் செயலர் பால்ராஜ், ஜெயலலிதா பேரவைச் செயலர் குட்லக் செல்வராஜ், எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் நடராஜன், வைப்பார் ஊராட்சி முன்னாள் தலைவர் செண்பக பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் மாணிக்கராஜ் வரவேற்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT