தூத்துக்குடி

புன்னக்காயலில் இன்று கால்பந்து போட்டி தொடக்கம்

15th Jul 2019 07:04 AM

ADVERTISEMENT

புன்னக்காயலில் பள்ளிகளுக்கிடையிலான கால்பந்து போட்டி திங்கள்கிழமை (ஜூலை 15) தொடங்குகிறது.
புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் நடத்தும் 4ஆவது ஜோசப் பர்னாந்து (அப்பா) நினைவு  சுழற்கோப்பைக்கான மாவட்ட அளவிலான இப்போட்டி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 21ஆம் தேதி அரையிறுதிப் போட்டிகளும், 22ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும்.
திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் முதலாவது போட்டியில் காயல்பட்டினம் சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி அணி, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதுகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT