தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிப்பு

15th Jul 2019 06:58 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நடந்துச் சென்ற பெண்ணிடம் இருந்து  நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 5 ஆவது தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி கவிதா (39). இவர், வீட்டின் அருகேயுள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாராம். பிரையன்ட்நகர் 2 ஆவது தெரு பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த இளைஞர் கவிதா, அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாராம். கவிதா சப்தம் இட்ட போதிலும் மோட்டார் சைக்கிளில் சென்றவரை பிடிக்க முடிய வில்லையாம். இதுகுறித்து, தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி வி.எம்.எஸ். நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், தனது மனைவி சகாய மொபீனா மற்றும் குழந்தைகளுடன் சனிக்கிழமை இரவு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, சகாய மொபீனா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, 2 செல்லிடப்பேசி ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்று விட்டனராம். இதுகுறித்து, சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT