கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய பகுதியில் 2016 இல் நிகழ்ந்த பல்வேறு திருட்டு வழக்கில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற கார்த்திக்ராஜ் (29) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கார்த்திக்ராஜ், கடந்த சில மாதங்களாக வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாராம். ஜூன்3 ஆம் தேதி கோவில்பட்டி குற்றவியல் 2 ஆவது நீதிமன்றம் கார்த்திக்ராஜுக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதனிடையே, காவல் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் தலைமையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனராம். அப்போது, அங்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கார்த்திக் ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார்குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.