ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் சுவாமி, அம்பாள் மற்றும் பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நந்தியம்பெருமான் ரிஷப வாகனத்தில் பிரகார வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.