தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்  பள்ளியில்  57 பேருக்கு மடிக்கணினி

12th Jul 2019 07:35 AM

ADVERTISEMENT

ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.  
தலைமை ஆசிரியை ஆர். வசந்தகுமாரி  தலைமை வகித்தார்.பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் த.கொம்பு மகாராஜா அரசின் விலையில்லா மடிக்கணினிகளை மாணவ,  மாணவியர் 57 பேருக்கு வழங்கினார். இதில் மாவட்ட நாட்டு நலப்பனித்திட்ட அலுவலர் ஆர்.கள்ளவாண்டப் பெருமாள்,  தமிழாசிரியர் எஸ்.முருகேசன் உள்பட  பலர் கலந்ததுகொண்டனர். ஆசிரியை டி.சுதாராணி நன்றி கூறினார்.

பண்டாரஞ்செட்டிவிளை பள்ளியில்...
உடன்குடி, ஜூலை11: உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரிஆன் பெஸ்ட் பெண்கள் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பண்டாரஞ்செட்டிவிளை சேகரகுரு ஜாண்சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். தாளாளர் விஜயகுமாரி ராஜேந்திரசிங், திருமண்டில பெருமன்ற உறுப்பினர் ஞானதேசிகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 திருச்செந்தூர் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஆ.செல்லத்துரை, உடன்குடி ஒன்றிய அதிமுக செயலர் த.மகராஜா  ஆகியோர்  87 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர். தலைமையாசிரியை நிர்மலா எப்சிபாய் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT