பி.எஸ்.என்.எல். நிறுவனம் குறித்து தவறான தகவல் பரப்பப்படுவதை கண்டித்து, தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். விரைவில் மூடப்பட இருப்பதாக தகவல் பரபரப்பப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் பி.எஸ்.என்.எல். அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்து தொழிற்சங்க மாவட்டத் தலைவர் முருகப்பெருமாள் தலைமை வகித்தார். அமைப்பின் நிர்வாகிகள் பாலகண்ணன், பன்னீர்செல்வம், மரிய அந்தோணி பிச்சையா, சொர்ணராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதில்,100-க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.