தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலைய பகுதி கிராமங்களில் ரூ. 85 லட்சத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்

4th Jul 2019 06:30 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் ரூ. 85 லட்சம் செலவில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், விமான நிலையத்தை சுற்றி உள்ள கிராம மக்கள் சுகாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, முதல்கட்டமாக தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் ரூ.85 லட்சம் செலவில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 
இந்த திட்டத்தில் முடிவைத்தானேந்தல், கட்டாலங்குளம், குமாரகிரி, சேர்வைக்காரன்மடம்  ஆகிய பகுதிகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விமான நிலைய இயக்குநர் என். சுப்பிரமணியன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டனர். 
நிகழ்ச்சியில், விமான நிலைய இணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொது மேலாளர் பிஜூ, மேலாளர் ஜெயராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT