தூத்துக்குடி

"தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்'

4th Jul 2019 06:27 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 5 ) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) காலை 10.30 மணிக்கு தூத்துக்குடி ஆசிரியர் காலனி 1ஆம் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில், பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால்,  10,  பிளஸ் 2,  பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் தங்களது பயோடேட்டா, கல்விச் சான்றுகளுடன் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT