கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, அஞ்சலக இணையதள வங்கி சேவைத் திட்ட விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
அஞ்சல் அலுவலகங்களில் ஜூலை முதல் வாரம்( ஜூலை 1 முதல் 6ஆம் தேதி வரை) மின்னணு பரிவர்த்தனை வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள்களில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, அஞ்சலக இணையதள வங்கி சேவை மற்றும் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் வழங்கும் மின்னணு சேவைகள் குறித்து கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம், கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள தலைமை அல்லது துணை அஞ்சல் அலுவலகத்தை அணுகி அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் மின்னணு சேவைகளை பெற்று பயனடையுமாறு முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் நிரஞ்சலா தேவி கேட்டுக் கொண்டார்.