தூத்துக்குடி

உலக மக்கள் தொகை தினம்

2nd Jul 2019 06:27 AM

ADVERTISEMENT

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிலைய மருத்துவர் பிரிசில்லா பூர்ணிமா தலைமை வகித்தார். விழாவில், குடும்ப கட்டுப்பாடு முறைகள், பாதுகாப்பான உறவுமுறைகள், குடும்ப நலம், பெண் நலம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. குடும்ப நல உறுதிமொழி எடுக்கப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டன. 
  நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செல்வகுமார், சுஜிதா, முத்து வள்ளி , செவிலியர் கண்காணிப்பாளர் இந்திரா காந்தி, மகப் பேறு உதவியாளர் பூமணி, மருத்துவமனை நிர்வாக உதவியாளர் முருகன், எழுத்தர் பிச்சாண்டி  உள்பட பலர்  கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT