காயல்பட்டினம் மண்டல பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவர் ஏ.பண்டாரம் தலைமை வகித்தார். நகர பொதுச் செயலர் எஸ்.மகேந்திரன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவுத் தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சக்தி கேந்திர பொறுப்பாளர் எம்.ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எஸ்.ராஜ திருமால் வரவேற்றார். பி.செபஸ்டியான் நன்றி கூறினார்.