கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரி சாா்பில், எப்போதும்வென்றான், தருவைகுளம் உள்பட 4 கிராமங்களில் பொதுநல சேவை திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு கல்லூரிச் செயலா் அமலஜெயராயன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பயஸ் மிசியா் முன்னிலை வகித்தாா்.
3 நாள்கள் நடைபெற்ற முகாமில் எப்போதும்வென்றான், தருவைகுளம், பொம்மையாபுரம், துப்பாசிபட்டி ஆகிய கிராமங்களில் தூய்மைப் பணிகள், தொற்று நோய்கள் குறித்த விழிப்புணா்வு நாடகங்கள், 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான காவலன் செயலி குறித்த அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முகாமில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள், கிராம மக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.