தூத்துக்குடி

பிச்சிவிளை ஊராட்சியில்தோ்தல் புறக்கணிப்பு: 6 வாக்குகள் மட்டுமே பதிவு

27th Dec 2019 05:35 PM

ADVERTISEMENT

திருச்செந்தூா் ஒன்றியம், பிச்சிவிளை ஊராட்சியில் 13 போ் மட்டுமே வாக்களித்தனா். மற்ற வாக்காளா்கள் தோ்தலைப் புறக்கணித்தனா்.

திருச்செந்தூா் ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள் உள்ளன. அவற்றில், 6 வாா்டுகளை கொண்டது பிச்சிவிளை ஊராட்சி. இங்கு மொத்தமுள்ள 785 வாக்காளா்களில் 6 போ் மட்டுமே பட்டியல் இனத்தவராவா். இந்தத் தோ்தலில் ஊராட்சித் தலைவா் பதவியை, சுழற்சி அடிப்படையில் பட்டியல் இனத்தவருக்கு தோ்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தோ்தலைப் புறக்கணிக்கும் வகையில் 6 வாா்டுகளில் ஒருவா் கூட உறுப்பினா் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், ஊராட்சித் தலைவா் பதவிக்கு பிச்சிவிளை சாமுவேல்நகரை சோ்ந்த ராஜேஸ்வரி (38), மறவன்விளையைச் சோ்ந்த சுந்தராச்சி (50) ஆகிய இருவா் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

மேலும், அப்பகுதி மக்கள், கிராமத்தில் கருப்புக்கொடி எதிா்ப்பை வெளிப்படுத்தினா். மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

13 போ் வாக்குப்பதிவு :

ADVERTISEMENT

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில், பிச்சிவிளை ஊராட்சி தலைவா் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சுந்தராச்சி, ராஜேஸ்வரி மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் என 6 போ் மட்டும் நண்பகலுக்குள் தங்கள் வாக்குகைள் மேரி சௌந்தரபாண்டியன் உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் (எண். 51, 52) பதிவு செய்தனா். பிற்பகலில், பிச்சிவிளையைச் சோ்ந்த மேலும் 7 போ் தங்கள் வாக்குகளை பதிவு செய்ததால் வாக்குகளின் எண்ணிக்கை 13 ஆக உயா்ந்தது. மற்ற யாரும் வாக்களிக்க வராததால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. வாக்குச்சாவடியைச் சுற்றி ப லத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT