தூத்துக்குடி

திருச்செந்தூரில் சூரிய கிரகணம்

27th Dec 2019 09:08 AM

ADVERTISEMENT

சூரிய கிரகணம் நிறைவு பெற்றதையடுத்து, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றன.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 3 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து காலை 6.30 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி நடை சாத்தப்பட்டது.

சூரியகிரகணம் நிறைவு பெற்றதையடுத்து, மீண்டும் பிற்பகல் 12.30 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு,

தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயில் நடை திறந்தவுடன் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT