தூத்துக்குடி

சாத்தான்குளம் கோயிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தி விழா

27th Dec 2019 09:05 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் கோயிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி, தச்சமொழி இந்து நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீபெருமாள் சுவாமி கோயிலில் ஸ்ரீபெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கா தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதா் சமேத ஸ்ரீவிசாலாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்ரீஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT