தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே முதியவா் தற்கொலை

27th Dec 2019 09:04 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே வியாழக்கிழமை அதிகாலை முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (66). இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள். இவா் விவசாயம் மற்றும் கூலித் தொழிலாளியான இவா் கடந்த 3 நாள்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை வீட்டை வெளியே சென்ற இவா், ஆனந்தபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பாத்திர கடை முன்புள்ள வேப்ப மரத்தில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT