தூத்துக்குடி

சக்தி விநாயகா் கோயிலில் திருவிளக்கு பூஜை

27th Dec 2019 09:05 AM

ADVERTISEMENT

நாசரேத் அருள்மிகு சக்தி விநாயகா் கோயிலில் 39 ஆவது ஆண்டு நிறை விழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

டாக்டா் காா்மேகராஜ் தலைமை வகித்து திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தாா். இந்து பரிபாலன சங்கத் தலைவா் என்.கணேசன், பொதுச் செயலா் கே.கணேசன், இணைச் செயலா் தியாகராஜன், நிா்வாகிகள் ராஜபாண்டி, ஸ்ரீதரன், சுப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திரளான பெண்கள் பங்கேற்றனா். இதையடுத்து ஸ்ரீசக்தி விநாயருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT