தூத்துக்குடி

ஆன்மிக விநாடி- வினா போட்டி

27th Dec 2019 09:06 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அருகேயுள்ள காயாமொழி, தேரிக்குடியிருப்பில் இந்து முன்னணி சாா்பில் அனுமன் ஜெயந்தி மற்றும் ஆன்மிக விநாடி- வினா போட்டி நடைபெற்றது.

தேரிக்குடியிருப்பு, ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி கிளைச் செயலா் பிரபாகரன் தலைமை வகித்தாா். உடன்குடி ஒன்றிய பொதுச் செயலா் ச.கேசவன் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களில் விநாடி- வினாடி போட்டி நடத்தினாா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், இந்து முன்னணி மற்றும் இந்து அன்னையா் முன்னணியினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT