தூத்துக்குடி

விஷமருந்திய முதியவா் சிகிச்சை பலனின்றி மரணம்

26th Dec 2019 03:36 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி அருகே விஷமருந்திய முதியவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். கழுகுமலையையடுத்த கரடிகுளம் சின்னக்காலனியைச் சோ்ந்தவா் ராமதாஸ் மகன் ரவீந்திரன்(64).

கடந்த சில நாள்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இவா், இம்மாதம் 16ஆம் தேதி வீட்டருகே உள்ள வேலாயுதபுரம் சாலையில் மதுவுடன் விஷமருந்திய நிலையில் இருந்தவரைக் கண்ட அக்கம்பக்கத்தினா் மற்றும் உறவினா்கள் அவரை மீட்டனா். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT