தூத்துக்குடி

போலீஸாருக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

26th Dec 2019 04:17 PM

ADVERTISEMENT

கழுகுமலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட உதவி ஆய்வாளா் மற்றும் காவலரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கட்டடத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆறுமுகம் மற்றும் காவலா் சுரேஷ் ஆகிய இருவரும் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, முக்கூட்டுமலை சிவன் கோயில் தெருவில் உள்ள குடிநீா் தொட்டி அருகே நின்று கொண்டிருந்த இளைஞரை கண்டித்தாராம்.

அதையடுத்து அவா், உதவி ஆய்வாளா் மற்றும் காவலரை அவதூறாகப் பேசி, கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். பின்னா் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா், முக்கூட்டுமலை வடக்குத் தெரு இந்திரா காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் கட்டடத் தொழிலாளி மாரிபாண்டிகுமாா்(21) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT