ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் இணைய சேவை பாதிப்பால் கடந்த சில நாள்களாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் பாதிப்படைந்துள்ளனா்.
ஆறுமுகனேரி ரயில் நிலையத்துக்கு இணைய சேவை இல்லாத நிலையில் டிக்கெட் புக்கிங் நிலையமான காயல்பட்டினம் ரயில் நிலையம் மூலம் இணைய இணைப்பு வழங்கி முன் பதிவு நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு அமைப்புகள் கோரிக்கையை அடுத்து, ஆறுமுகனேரிக்கு தனி இணைய சேவை வழங்கி, இங்கிருந்து குரும்பூா் மற்றும் கச்சனாவிளைக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், ஆறுமுகனேரி, குரும்பூா் மற்றும் கச்சனாவிளை ஆகிய மூன்று ரயில் நிலையங்களிலும் இணைய சேவை பாதிப்பால், டிக்கெட் முன்பதிவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி ரயில் பயணிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, ஆறுமுகனேரி ரயில் நிலையத்தில் இணைய சேவையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில்வே வளா்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளா் இரா.தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.