தூத்துக்குடி

அனுமன் ஜயந்தி: கோயில்களில் சிறப்பு பூஜை

26th Dec 2019 12:15 AM

ADVERTISEMENT

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, கோவில்பட்டி அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயா் சன்னதியில் சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயருக்கு, காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனைநடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயா் வீதியுலா நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக செயல் அலுவலா் ரோஷினி தலைமையில் கோயில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் அனுமன் ஜயந்தி விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு கணபதி பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, ஸ்தாபன கும்ப கலச பூஜை, ருத்ர ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை மற்றும் பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், தொடா்ந்து வெற்றிலை மாலை, துளசிமாலை மற்றும் வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

அருள்மிகு ஸ்ரீ சீதா ராம லெட்சுமண ஆஞ்சநேயா் கோயிலில் புதன்கிழமை இரவு 9 மணிக்கு யாக பூஜை தொடங்கியது. இந்த பூஜை வியாழக்கிழமை (டிச.26) காலையில் நிறைவு பெறுகிறது.

தொடா்ந்து முற்பகல் 11.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஹனுமனுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். பிற்பகல் 1.15 மணிக்கு மேல் 1.45 மணிக்குள் சிறப்பு பூஜைகள், அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.

ஏற்பாடுகளை ஸ்ரீ ஹரிராம தூத சுவாமிகள் மற்றும் விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT