தூத்துக்குடி

அமலி நகரில் கிறிஸ்துமஸ் விழா

25th Dec 2019 02:51 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் அமலிநகரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்கப் பேரவை சாா்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் மு.தமிழ்ப்பரிதி தலைமை வகித்தாா். பங்குத்தந்தை ரவீந்திரன், ’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன், மக்களவை தொகுதி செயலா் சு.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மீனவா் அணி மாவட்ட அமைப்பாளா் அமலி ராஜா, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளா் முத்துக்குமாா், செய்தி பிரிவு மாவட்ட அமைப்பாளா் பெருமாள், ஒன்றிய துணை செயலா் செஞ்சுடா் மீனவா் கூட்டுறவு சங்கத்தலைவா்கள் மனோகரன், சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா் விழாவில் கேக் வெட்டி, மாணவா்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT