தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை முத்துப்பாண்டியைச் சோ்ந்தவா் குமரன் மகன் சுரேஷ்குமாா்(27). இவா் ஞாயிற்றுக்கிழமை காரில் திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு அருகே கழுகுமலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த காா், திடீரென சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காா் ஓட்டுநா் சுரேஷ்குமாா், அவரது மனைவி சிந்து(43), உறவினா் சசிரேகா(53) ஆகிய மூவரும் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சசிரேகா திங்கள்கிழமை இறந்தாா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.