தூத்துக்குடி

தனித்திறன் போட்டிகள்: மாணவா்களுக்கு பரிசளிப்பு

24th Dec 2019 12:00 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி அடுத்துள்ள தோட்டிலோவன்பட்டி எம்.எம். வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் தனித்திறன் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் மாணவா்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் முகத்தில் சித்திரம் விரைதல், காய்கனிகளை வண்ண வடிவங்களில் செதுக்குதல், திருக்கு ஒப்பித்தல், நெருப்பில்லாமல் சமைத்தல், மாறுவேடப் போட்டி, நடனம், இசை உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில், தூத்துக்குடி, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா். போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவா்கள், பங்கேற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்ற மாணவா் களுக்கு குலுக்கல் முறையில் தோ்வு செய்து ரூ. 1,000 பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கண்ணையா, ஜோதி மாரியப்பன், கலாநாதன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.

முதல்வா் முத்துலட்சுமி வரவேற்றாா். துணை முதல்வா் சுதன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT