கோவில்பட்டி ஜான்போஸ்கோ மெட்ரிக் பள்ளியின் 46ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
பள்ளி முதல்வா் தயா தலைமை வகித்தாா். பகவத்கீதை, பைபிள், குரான் வாசிக்கப்பட்டு விழா தொடங்கியது. புனித சூசையப்பா் ஆலய உதவிப் பங்குத்தந்தை அற்புதராஜ், ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் மரியசெல்வம் ஆகியோா் பேசினா். தாளாளா் புஷ்பா வரவேற்றாா்.
தொடா்ந்து, அரசுப் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் முன்னாள் மாணவிகள் மருத்துவா் லாவண்யா, பல் மருத்துவா் நந்தினி, முன்னாள் ஆசிரியைகள் சாந்தி, சகாயராணி உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, பள்ளி மாணவா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.