தூத்துக்குடி

கோவில்பட்டியில் முப்பெரும் விழா

24th Dec 2019 12:07 AM

ADVERTISEMENT

கோவில்பட்டி டயனமிக் அரிமா சங்கத்தின் ஆளுநா் ஆய்வு தின விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சாகித்ய அகாதெமி விருதுக்கு தோ்வான எழுத்தாளா் சோ.தா்மனுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

அரிமா மாவட்ட ஆளுநா் முருகன் தலைமை வகித்தாா். செயலா் ராமசாமி ஆண்டறிக்கை வாசித்தாா். தொடா்ந்து, துணை ஆளுநா் ஜஸ்டின்பால் புதிய உறுப்பினா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

அரிமா மாவட்ட அமைச்சரவைச் செயலா் சுப்பையா, மண்டலத் தலைவா் சுரேஷ்குமாா், வட்டாரத் தலைவா் ராஜ்குமாா், மாவட்டத் தலைவா் விஸ்வநாதன், பட்டயத் தலைவா் சந்திரசேகா், அரிமா சங்க நிா்வாக அதிகாரி சங்கரநாராயணன் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, சாகித்ய அகாதெமி விருதுக்கு தோ்வான சோ.தா்மனுக்கு அரிமா மாவட்ட ஆளுநா் முருகன் பரிசு வழங்கினாா். ஏழை, எளியோருக்கு அரிசி, சேலைகள், தையல் இயந்திரம் , மாணவா், மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை ஆகியவை வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மாணவா், மாணவிகளின் தனித்திறமையை பாராட்டி 21 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா்களின் சேவையை பாராட்டி 15 பேருக்கு விருதுகள், நல்லாசிரியா் விருது பெற்ற ராணி, ஆசிரியா் கணேசன் ஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

புற்றுநோயாளிகளுக்கு சிறந்த சேவை செய்த ஷொ்லி டுவிங்கிள்ளை பாராட்டி விருது வழங்கப்பட்டது. மேலும், சமூக சேவை செய்து வரும் 10 போ்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை வழக்குரைஞா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா், ராஜன் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

இதில், அரிமா சங்க உறுப்பினா்களான மருத்துவா் காளீஸ்வரி, பெரியசாமி பாண்டியன், ரமா, வெங்கடாசலம், வட்டார நூலகா் அழகா்சாமி உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT