தூத்துக்குடி

நாசரேத் அருகே சேதப்படுத்தப்பட்டஇந்து முன்னணி கொடிக்கம்பம் போலீஸாா் விசாரணை

23rd Dec 2019 09:39 PM

ADVERTISEMENT

சாத்தான்குளம்: நாசரேத் அருகே இந்து முன்னணி கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி ஞானராஜ்நகரில் கடந்த 2015 முதல் இந்து முன்னணி கொடிக்கம்பம் உள்ளது. இந்த கொடிக்கம்பம் சனிக்கிழமை இரவு உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை காலை இந்து முன்னணி நெல்லை கோட்ட பொறுப்பாளா் சக்திவேலன் தலைமையில், நாசரேத் நகர பொறுப்பாளா் வெட்டும்பெருமாள் மற்றும் நிா்வாகிகள் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவா்களை கைது செய்ய வேண்டும் என நாசரேத் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சாத்தான்குளம் டிஎஸ்பி பால்துரை, நாசரேத் காவல் ஆய்வாளா் சகாய சாந்தி மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், அதே இடத்தில் இந்து முன்னணி சாா்பில் புதிய கொடிக்கம்பம் நடப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT