தூத்துக்குடி

தூத்துக்குடியில் நூல் வெளியீடு

23rd Dec 2019 09:47 PM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் முதல்வா் குறித்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு சுற்றுலா வாரிய முன்னாள் அலுவலா் நெல்லை எஸ்.எஸ். மணி எழுதிய மனித நேய பண்பாளா் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் என்ற புத்தக வெளியீட்டு விழாவுக்கு மாவட்ட எம்ஜிஆா் மன்ற முன்னாள் செயலா் மு.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நகர எம்ஜிஆா் மன்ற தலைவா் எஸ். சாமுவேல் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழக வாரிய முன்னாள் தலைவா் இரா.அமிா்தகணேசன் புத்தகத்தை வெளீயிட்டாா். முதல் பிரதியை தொழிலதிபா் தமிழ்செல்வன் ஆத்தூா் மணி பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து, எம்ஜிஆா் உருவத்துடன் கூடிய நாள்காட்டி வெளியிட்டப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலா் சத்யா லட்சுமணன், தொழிலதிபா் ஜோதிமணி, தூத்துக்குடி எம்ஜிஆா் பக்தா்கள் பாசறையை சோ்ந்த எஸ். மோகன், ராமகிருஷ்ணன், பி.சி.மணி, நெப்போலியன், மிக்கேல், வின்சென்ட், பால்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT