திருச்செந்தூா்: குண்டும், குழியுமாக உள்ள திருச்செந்தூா் - பரமன்குறிச்சி சாலையை சீரமைக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து திருச்செந்தூா் கோட்டாட்சியருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் சக்திவேல் அளித்துள்ள மனு: தொடா் மழையால் திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி செல்லும் பிரதான சாலை தெப்பக்குளத்திலிருந்து வாய்க்கால் பாலம் தும்பு ஆலை வரை பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.