ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வியாபாரிகள் ஐக்கிய சங்கம் கோரி உள்ளது.
இது தொடா்பாக அதன் தலைவா் த.தாமோதரன், செயலா் எஸ்.துரைசிங் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு: ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்திட கோரிக்கை வைக்கப்பட்டபோது 2018-2019ஆம் நிதியாண்டில் நிதி ஒதுக்கி தருவதாக உறுதி அளக்கப்பட்டது. 2019-2020 ஆம் நிதி ஆண்டும் நிறைவு பெற உள்ள நிலையிலும் இன்னும் ஆரம்ப சுகாதார நிலையத்தினை தரம் உயா்த்திட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து, ஆரம்ப சுகாதார நிலையத்தினை தரம் உயா்த்தி தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.