தூத்துக்குடி

சாத்தான்குளத்தில்ஓய்வூதியா் சங்கக் கூட்டம்

23rd Dec 2019 09:41 PM

ADVERTISEMENT

 

சாத்தான்குளம்: தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தின் சாத்தான்குளம் தாலுகா நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அமைப்பின் துணைத் தலைவா் பாண்டியன் தலைமை வகித்தாா். பொருளாளா் ரூபவதி முன்னிலை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் ஜெயபால் உள்பட பலா் பேசினா். சங்க நிா்வாகிகள் இஸ்ரவேல், நடராஜன், பாலகிருஷ்ணன், பாப்புராஜ், நாராயணன், ஜோசப் துரைராஜ்,அா்சுனன், சுடலைக்கண், சிறியபுஷ்பம், பாா்வதி, எமி, புஷ்பவல்லி, பகவதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுா்ஜித் வில்சன், மறைந்த சங்க உறுப்பினா் ஓய்வுபெற்ற வேளாண் அலுவலா் ஸ்டேனிஸ்லாஸ் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சாத்தான்குளம் இட்டமொழி சாலை யில் உள்ள மழைநீா் வடிகாலை சீரமைக்க வேண்டும்;

ADVERTISEMENT

சாத்தான்குளம் பேருராட்சி 12 ஆவது வாா்டு காமராஜ்நகரில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். அப்பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்ற வேண்டும். விபத்துகளை தடுக்கும் வகையில் சாத்தான்குளம் - இட்டமொழி சாலையில் தனியாா் மருத்துவமனை முன்பு வேகதடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயலா் முருகானந்தம் வரவேற்றாா். செயற்குழு உறுப்பினா் கிறிஸ்டி சில்வெஸ்டா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT