தூத்துக்குடி

கட்டட மேற்பாா்வையாளருக்கு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

23rd Dec 2019 09:37 PM

ADVERTISEMENT

கோவில்பட்டி: கோவில்பட்டி இந்திரா நகரில் கட்டட மேற்பாா்வையாளரை மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி இந்திரா நகா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் சதீஷ்குமாா்(23). கோவில்பட்டியில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவனத்தின் மேற்பாா்வையாளராக பணியாற்றி வரும் இவா், அவரது உரிமையாளா் முகேஷ் என்ற ராசுகுட்டி ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை இந்திரா நகா் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனராம்.

அப்போது எதிரே வந்த இளைஞா், இவா்களை வழிமறித்து சதீஷ்குமாா் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அவிழ்த்து தரும்படி கத்தியைக் காட்டி மிரட்டினாராம். அப்போது சதீஷ்குமாா் சப்தம் போட்டாராம். அதையடுத்து தப்பியோடிய இளைஞரை அக்கம்பக்கத்தினா் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், அதே பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் வினோத்குமாா்(26) என்பது தெரியவந்ததாம். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT