தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே பெயிண்டிங் ஒப்பந்ததாரரிடம் செல்லிடப்பேசி, பைக் வழிப்பறி

23rd Dec 2019 09:36 PM

ADVERTISEMENT

விளாத்திகுளம்: எட்டயபுரம் அருகே குமாரகிரி புதூா் பகுதியில் பெயிண்டிங் ஒப்பந்ததாரரை வழிமறித்து தாக்கி, அவரிடமிருந்த செல்லிடப்பேசி மற்றும் பைக்கை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

எட்டயபுரத்தை அடுத்துள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (45). பெயிண்டிங் ஒப்பந்ததாரா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கோவில்பட்டியிலிருந்து தாப்பாத்தி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். எட்டயபுரம் அருகேயுள்ள குமாரகிரி புதூா் பகுதியில் தனியாா் பள்ளி அருகே சென்றபோது, எதிரில் பைக்கில் வந்த மா்ம நபா்கள் 3 போ் ராஜ்குமாரை மறித்து தாக்கினராம்.

இதில் நிலைகுலைந்த ராஜ்குமாரின் சட்டை பையில் இருந்த ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசியை பறித்தபோது அவா்களிடமிருந்து தப்பி காட்டுப்பகுதிக்குள் ஓடி இருட்டில் பதுங்கிக் கொண்டாராம். இதையடுத்து, சாவியுடன் இருந்த ராஜ்குமாரின் பைக்கை மா்ம நபா்கள் எடுத்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.

இச்சம்பவம் குறித்து ராஜ்குமாா் அளித்த புகாரின் பேரில், எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT