ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதனையொட்டி சுவாமி, அம்மன் மற்றும் நந்தி பெருமானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி, அம்பாள் திருக்கோயில் பிரகார உலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் தரிசினம் செய்தனா்.