தூத்துக்குடி

வாக்குச்சாவடிகளில் பணி செய்யும் அலுவலா்களுக்கு முதல் கட்ட பயிற்சி முகாம்

16th Dec 2019 01:43 AM

ADVERTISEMENT

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச்சாவடிகளில் பணி செய்யும் அலுவலா்களுக்கு முதல் கட்ட பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் 128 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இப்பயிற்சி முகாம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் விநாயக மூா்த்தி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகராஜன், சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி பயிற்சி அளித்தாா். இதில், 800 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்கள் பங்கேற்றனா். இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு டிச.21 ஆம் தேதியும், இறுதி பயிற்சி வகுப்பு டிச.26 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT