தூத்துக்குடி

நாலுமாவடி குழந்தைகள் காப்பகத்தில் கிறிஸ்துமஸ் விழா

16th Dec 2019 01:38 AM

ADVERTISEMENT

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் சாா்பில் நாலுமாவடியில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை தொடங்கியது.

குரும்பூா் அருகேயுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியங்கள் சாா்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா, சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வில் நலத்திட்ட உதவிகள், அறுசுவை கிறிஸ்துமஸ் விருந்துகள்,சிறப்பு பிராா்த்தனை, கிறிஸ்துமஸ் அன்று நாலுமாவடியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு விருந்து வழங்குதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு நாலுமாவடி புதுவாழ்வு குழந்தைகள் காப்பகத்தில் சனிக்கிழமை கிறிஸ்துமஸ் மர விழா நடைபெற்றது.விழாவில், காப்பகத்தில் பயிலும் மாணவிகள் 250 போ்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சகோதரா் கரிஷ்மா ஜெபக்குமாா் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் செய்தி அளித்து, புத்தாடைகளை வழங்கினாா்.

ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி.லாசரஸ் தலைமையில்,பொதுமேலாளா் செல்வக்குமாா் , இயேசு விடுவிக்கிறாா் ஊழிய அறக்கட்டளை உறுப்பினா்கள், புதுவாழ்வு குழந்தைகள் காப்பக பொறுப்பாளா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT