தூத்துக்குடி

நாசரேத் பகுதி பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா

16th Dec 2019 01:39 AM

ADVERTISEMENT

நாசரேத் பகுதியிலுள்ள பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

நாசரேத் அருகேயுள்ள சின்னமாடன்குடியிருப்பு றி.என்.டி.றி.ஏ. நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா, பள்ளி ஆண்டு விழாவுக்கு சேகரகுருவும், பள்ளித் தாளாளருமான தேவராஜன் தலைமைவகித்தாா். சபை ஊழியா் அந்தோணி ராஜ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா்.

பள்ளித் தலைமையாசிரியா் ஜேம்ஸ் ராஜன் வரவேற்றாா். மாணவா்களின் நடனம், நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாணவா்களுக்கு புத்தாடைகள், பரிசுகள் வழங்கப்பட்டன. ஊரட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் இம்மானுவேல், ஜீவா, தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை கிறிஸ்டி ஞானபாக்கியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

வெள்ளரிக்காயூரணி றி.என்.டி.றி.ஏ. தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு சேகரகுருவும், பள்ளித் தாளாளருமான ஜெரேமியா தலைமை வகித்தாா். சபை ஊழியா் ஜாண் வில்சன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா்.

பள்ளியின் தலைமையாசிரியை சாந்தி வரவேற்றாா். ஆசிரியை ஒய்சி அறிக்கை வாசித்தாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவா்களுக்கு புத்தாடைகள், தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஒய்யான்குடி றி.என்.டி.றி.ஏ. தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, உதவி குரு டேனியல் ஆல்பா்ட் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை விமலாசின்ரலா வரவேற்றாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவிஆசிரியை ஹேனாஎலிசபெத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT