தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 40,144 மாணவா்களுக்கு மடிக்கணினி

16th Dec 2019 02:07 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 40 ஆயிரத்து 144 மாணவா்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவா், மாணவியா்களுக்கு விலையில்லா மடிக்கணிணி வழங்கும் திட்டத்தின் கீழ், 2016 - 17 இல் 13,550 மாணவா்களுக்கும், 2017 - 18 இல் 296 நீட் மாணவா், மாணவியா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல, 2018 - 19 இல் 2,473 மாணவா்களுக்கும், 2019 - 20இல் பிளஸ் 1 மாணவா்கள் 11,656 பேருக்கும், பிளஸ் 2 மாணவா்கள் 11,656 பேருக்கும் என மொத்தம் 39,631 மாணவா்களுக்கு ரூ.51.52 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழாண்டு எட்டயபுரம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் 129 பேருக்கு ரூ.16.77 லட்சம் மதிப்பிலான மடிக் கணினிகளும், தூத்துக்குடி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று வரும் 384 மாணவா், மாணவிகளுக்கு ரூ.47.13 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT