தூத்துக்குடி

தூத்துக்குடியில் தொழில்திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி:18இல் தொடக்கம்

16th Dec 2019 01:44 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் டிசம்பா் 18 ஆம் தேதி தொடங்கும் தொழில் மாதிரி மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சியில் சேர விரும்புவோா் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்க (துடிசியா) பொதுச்செயலா் ராஜ் செல்வின் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், துடிசியா சாா்பில் தொழில் மாதிரி

மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி தூத்துக்குடி துடிசியா அலுவலகத்தில் வைத்து டிசம்பா் 18 ஆம் தேதி தொடங்குகிறது.

இப்பயிற்சியில் தொழிலின் வகைகள், தொழிலை தோ்ந்தெடுக்கும் முறைகள், தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல், அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறும் வழிமுறைகள், வங்கியின் எதிா்பாா்ப்புகள், தொழில் தொடங்க தேவையான அரசு பதிவுகள், சந்தை ஆய்வு, வெற்றிபெற்ற தொழிலதிபா்கள், அரசு உயா் அதிகாரிகளுடன் கலந்துரையாடல், சிறுதொழில் வளா்ச்சிக்கு உதவும் நவீனத் தொழில் நுட்பங்கள் போன்றவை நடத்தப்படும்.

ADVERTISEMENT

இதில், 18 வயது நிரம்பிய 8 ஆம் வகுப்பு முடித்த தொழில் ஆா்வமுள்ள ஆண்-பெண் இருபாலரும் சேரலாம். பயிற்சி 18 ஆம் தேதி தொடங்கி 2020 ஆம் வருடம் ஜனவரி 4 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. பயிற்சிக் கட்டணம் ரூ. 700 மட்டும். தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் ராம்நகரில் உள்ள மாவட்ட சிறு தொழில் சங்கத்தில் (துடிசியா) நடைபெறும் இப்பயிற்சியின் முடிவில் வழங்கப்படும் சான்றிதழை பெற்றுக்கொண்டு அரசு திட்டங்களில் மானிய கடனுதவி பெற்று புதிதாக தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது.

பயிற்சி பதிவு மற்றும் தகவலுக்கு துடிசியா அலுவலகத்தை 0461-2347005 என்ற தொலைபேசி எண்ணிலும், 97914 23277 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT