தூத்துக்குடி

தூத்துக்குடியில் இஸ்லாமிய அமைப்பினர் 300 பேர் கைது

16th Dec 2019 07:06 PM | தி. இன்பராஜ்

ADVERTISEMENT


மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டத் திருத்தத்தை திரும்ப்ப பெற வலியுறுத்தியும், தூத்துக்குடியில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில், திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை பொருளாளர் முகமது இஸ்மாயில் ஆலிம் தலைமை வகித்தார். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் முஜிபூர் ரஹ்மான் ஆலிம், நாகர்கோவில் கலாசார பள்ளிவாசல் தலைமை இமாம் ஷவ்கத் அலி உஸ்மானி, திராவிடர் விடுதலை கழக பரப்புரை செயலர் பால்பிரபாகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்தும்,  சட்டத் திருத்தத்தை திரும்ப்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையெடுத்து, காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 310 பேரை தென்பாகம் போலீஸார் கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT