தூத்துக்குடி

தூத்துக்குடியில் இணையவழி பயன்பாட்டு சேவை பயிலரங்கம்

16th Dec 2019 01:41 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரம் கல்லூரியில் மத்திய அரசின் அரசு திட்டங்கள் குறித்த தொகைகளை செலுத்துவதற்கும், அரசிடமிருந்து பல்வேறு துறைகளுக்கான தொகைகளை பெறுவதற்கும் உரிய இணைய வழி பயன்பாட்டு சேவை குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, வஉசி கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஜான் பிரான்சிஸ் சௌந்தரநாயகம் முன்னிலை வகித்தாா். இதில், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 40 கல்லூரிகளில் இருந்து 75 அமைச்சு பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் கல்லூரி முதல்வா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

பயிலரங்கில், மத்திய அரசின் நிதி அலுவலா் பிரான்சிஸ், விருதுநகா் விஎச்என்எஸ்என் கல்லூரி பேராசிரியா் மேகலிங்கம், கோவை நேரு கல்லூரி கணினி அறிவியல் துறை பேராசிரியை விஜயா ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT