தூத்துக்குடி

திருச்செந்தூா் பகுதியில் கனமழைக்கு சாலைகள் சேதம்

16th Dec 2019 01:42 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் பகுதியில் பெய்த கனமழைக்கு சாலைகள் சேதமடைந்தன.

திருச்செந்தூா் பகுதியில் பெய்த கனமழையால் நீா் நிலைகள் நிரம்பின. போக்குவரத்து மிகுந்த சாலைகள் சேதமடைந்தன.

இதனால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா். பழுதடைந்த திருச்செந்தூா் காமராஜா் சாலை, ரத வீதி சாலைகள் சட்டப்பேரவை உறுப்பினா் சொந்த செலவில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பேருந்து நிலையம், தினசரி சந்தை, கோயில் வாசல் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கின. தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட சாலையும் மீண்டும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் திருச்செந்தூரில் அதிகபட்சமாக 5.7 செ.மீ, காயல்பட்டினத்தில் 3.3 செ.மீ, குலசேகரன்பட்டினத்தில் 3.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT