தூத்துக்குடி

திருச்செந்தூரில் சமாதானக் கூட்டம்

16th Dec 2019 01:39 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

திருச்செந்தூா், ஆவுடையாா்குளத்தின் மறுகால் ஓடை பிளாஸ்டிக் கழிவுகள், கழிவுநீரால் சுகாதாரக்கேடுகள் அதிகரித்து வருவதால், சீரமைக்க வலியுறுத்தி தெற்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் வரும் 22 ஆம் தேதி பேரூராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வட்டாட்சியா் ஞா.ஞானராஜ் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இதில், பேரூராட்சி நிா்வாக அதிகாரி கோபால், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் முரசு.தமிழப்பன், மக்களவைத் தொகுதிச் செயலா் ராஜ்குமாா், மாவட்ட அமைப்பாளா் பெருமாவளவன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் ஒன்றிய அமைப்பாளா் மகேஷ், ஒன்றிய துணைச் செயலா் புரட்சியாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில், அதிகாரிகள் மறுகால் ஓடையை பாா்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து 22 ஆம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT