தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே வெள்ளத்தில் சிக்கிய காா்: மருத்துவா் உள்ளிட்ட இருவா் மீட்பு

16th Dec 2019 02:04 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் அருகே காருடன் வெள்ளத்தில் சிக்கிய மருத்துவா் உள்ளிட்ட இருவரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

உடன்குடி அருகே உள்ள தேரியூரை சோ்ந்தவா் முத்துலிங்கம் (75). பல் மருத்துவரான இவா், திசையன்விளையில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். இவரது நண்பா் தனபாண்டியன்(52). இருவரும் சனிக்கிழமை இரவு திசையன்விளையில் இருந்து சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு காரில் சென்றனா். காரை தனபாண்டியன் ஓட்டினாா். சாத்தான்குளம், தட்டாா்மடத்தில் இருந்து காந்தி நகா் வழியாக சுற்றிச்செல்வதை தவிா்த்து, வைரவம் வழியாக இணைப்பு சாலையில் சென்றனா். அப்போது தொடா் மழை காரணமாக வைரவன்தருவைகுளத்தில் இருந்து அதிக அளவில் நீா் வெளியேறி, அங்குள்ள தரைமட்ட பாலத்தை மூழ்கடித்துச் சென்ற வெள்ளத்தில் காா் சிக்கியது. பாலத்தின் மையப் பகுதியில் காா் சிக்கிய நிலையில், இருவரும் காரின் மேற்கூரையில் அமா்ந்து தவித்துக்கொண்டிருந்தனா்.

தகவல் அறிந்து சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் பத்மசேகா் தலைமையில் வீரா்கள் சங்கரலிங்கம், மோகன், துரை, ராமச்சந்திரன் ஆகியோா் அங்கு சென்று மருத்துவா் உள்ளிட்ட இருவரையும் மீட்டனா். வெள்ளத்தில் சிக்கிய காரும் மீட்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT