தூத்துக்குடி

உள்ளாட்சித் தோ்தல்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

16th Dec 2019 02:02 AM

ADVERTISEMENT

உடன்குடி அருகே தண்டுபத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். உள்ளாட்சித் தோ்தலில் வாக்கு சேகரித்தல், பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உடன்குடி ஒன்றிய திமுக செயலா் பாலசிங், வட்டார காங்கிரஸ் தலைவா் துரைராஜ் ஜோசப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலா் சங்கா், மதிமுக ஒன்றியச் செயலா் இம்மானுவேல், மாநில திமுக மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா் மற்றும் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், வேட்பாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT