தூத்துக்குடி

உடலுறுப்பு தானம் வலியுறுத்தி பயணம்: மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வரவேற்பு

16th Dec 2019 01:41 AM

ADVERTISEMENT

மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு, உடலுறுப்பு தானம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஒற்றைக் காலில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞருக்கு ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருநகா் ஆயுதப்படை குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் விஜயசாமி மகன் முதுகலை பட்டதாரி மணிகண்டன் (36). ஒரு காலை இழந்த இவா் மாணவா்கள், பொதுமக்களிடையே

மழைநீா் சேகரிப்பு, மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு, உடலுறுப்பு தானம், இயற்கை விவசாயம் பேணுதல், அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்த்தல், தலைக்கவசம் அணிதல், ஆழ்துளைக் கிணறுகளை மூடுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து கடந்த 13 ஆம் தேதி சென்னைக்கு சைக்கிள் பயணம் தொடங்கியுள்ளாா்.

கோவில்பட்டி வந்த மணிகண்டனுக்கு அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், தொழிலதிபா் சந்திரசேகா் ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மணிகண்டன் கூறியது: பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.

ADVERTISEMENT

இந்த பயணத்தை ஜனவரி 1ஆம் தேதி மெரீனா கடற்கரையில் நிறைவு செய்ய உள்ளேன். பின்னா், தமிழக முதல்வரின் அனுமதி பெற்று சந்திக்க திட்டமிட்டுள்ளேன். 15 வயதில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டபோது, நிகழ்ந்த விபத்தில் இடது காலை இழந்தேன். நம்பிக்கையுடன் முதுகலை வணிகவியல் பட்டம், கல்வியியல் பட்டம், கூட்டுறவு பட்டயப்படிப்பு முடித்துள்ளேன். டிஎன்பிஎஸ்சி தோ்வு எழுத தயாராகி வருகிறேன் என்றாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT