தூத்துக்குடி

ஆறுமுகனேரி அருகே சாலை விபத்தில் கப்பல் ஊழியா் பலி

16th Dec 2019 02:05 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கப்பல் ஊழியா் உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் அருகேயுள்ள ஆலந்தலை தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் பேட்ரிக் மகன் ஜேம்ஸ் (38). கப்பல் ஊழியா். அதே பகுதியைச் சோ்ந்த இருதயராஜன் மகன் ஜோசப். இருவரும் சில நாள்களுக்கு முன்பு மோட்டாா் சைக்கிளில் ஆலந்தலையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனா்.

பழையகாயல் சிவன்கோயில் அருகே வந்தபோது, மோட்டாா் சைக்கிள் திடீரென பஞ்சரானதால் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்டனா். இதனிடையே, சிகிச்சை பலனின்றி ஜேம்ஸ் அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக, ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ஜேம்ஸுக்கு மனைவி மினோலா, 2 மகன்கள் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT