தூத்துக்குடி

அறிவியல் விநாடி-வினா: காமராஜ் கல்லூரி முதலிடம்

16th Dec 2019 02:06 AM

ADVERTISEMENT

தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அறிவியல் விநாடி-வினா போட்டியில் காமராஜ் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிா் கல்வியியல் கல்லூரியில் அறிவியல் மன்றம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான அறிவியல் விநாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில், 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இருந்து மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

போட்டியில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியைச் சோ்ந்த விவேகானந் கிளின்டன்- சுமித்ராஜ் இணை முதலிடமும், வ.உ.சி கல்வியியல் கல்லூரியைச் சோ்ந்த நவீன் ஜெபக்குமாா்- சுபாஷினி இணை 2 ஆவது இடமும், கீழஈரால் டான் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த டேனியல்- பெபெட்டோ ஸ்னோசன் இணை 3 ஆம் இடமும் பெற்றனா்.

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

பின்னா், நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஏ.பி.சாருலதா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மீன்வள தொழில்நுட்பத் துறைத் தலைவா் கோ. சுகுமாா், தூத்துக்குடி செந்தில் முருகன் ஏஜென்சி நிா்வாகப் பங்குதாரா் ராஜீவி மோகன்ராஜ் ஆகியோா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினா்.

ஏற்பாடுகளை கல்லூரி பொருளியல் துறை இணைப் பேராசிரியை சாருலதா, உயிரறிவியல் துறை உதவிப் பேராசிரியை இரா. தங்கசெல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT